புதிய அமைச்சரவைக்கு அமைச்சுகள் ஒதுக்கும் பணி நிறைவு

அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர்களுக்காக ஒதுக்கப்படும் அமைச்சுக்களை ஒழுங்குபடுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்படும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் தொடர்பாக, ஒழுங்குகள் கடந்த புதன்கிழமை நிறைவடைந்தன.

இதையடுத்து பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த அறிக்கை, உடனடியாகவே தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டது.

அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயயக்கவிடமும் அந்த அறிக்கையின் பிரதி கையளிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் படி தேசிய அரசாங்கத்தில் 48 அமைச்சர்களை நியமிக்க முடியும்.

ஜனாதிபதி கேட்டுக் கொண்டதற்கிணங்க, பிரதமரின் செயலாளருடன் இணைந்து, புதிய அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த அறிக்கையின் விபரங்களை வெளியிட அவர் மறுத்துள்ளார்.