புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வடமராட்சி தென்மேற்கு கலாச்சார மத்திய நிலையம் திறப்பு

யாழ் கரவெட்டியில் நிர்மாணிக்கப்பட்ட வடமராட்சி தென்மேற்கு கலாச்சார மத்திய நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச கலை கலாச்சாரங்களை வலுப்படுத்தும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களின் விசேட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரகாரம் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் இந்த கலாசார மத்திய நிலையம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

கரவெட்டி பிரதேச செயலாளர் தனசொரூபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்,ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இம்மண்டபத்தை திறந்துவைத்தார்.

பதினெட்டு மில்லியன் செலவில் இக்கட்டிடம் நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் கலாச்சார உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகள் என்பனவும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,அமைச்சின் மேலதிக செயலளர் சேனநாயக்க,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்டபலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]