புதிதாக திருமணமான பெண்ணுக்கு நடந்த விபரீதம்- இப்படியும் ஒரு கணவரா??

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், சிறைக்காவலர் ஒருவர், திருமணமாகி 25 நாட்களே ஆன தனது இளம் மனைவியின் தலையைத் துண்டித்துக் கொன்ற கொடூர சம்பவம் நெல்லை அருகே அரங்கேறி உள்ளது.

நெல்லை மாவட்டம் தென்கலத்தில் வசித்து வருபவர் சிறைக்காவலர் பாலகுரு என்பவர் கடந்த 1 மாதத்திற்கு முன்பு மதுரையில் இருந்து மாறுதலாகி பாளையங்கோட்டை சிறையில் பணியாற்றி வந்தார்.

25 நாட்களுக்கு முன்பு தான் பாலகுருவுக்கும் வேலம்மாள் என்ற பெண்ணுக்கும் திருமணமானது.

இந்நிலையில், நேற்று காலை திருச்செந்தூர் செல்லலாம் எனக் கூறி, மனைவி வேலம்மாளை, சிறைக்காவலர் பாலகுரு இருசக்கர வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார்.

பாளையங்கோட்டை பொட்டல் அருகே சென்ற போது தனது பயங்கரத் திட்டத்தை பாலகுரு நிறைவேற்றி உள்ளார்.

மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, வேலம்மாளின் கழுத்தை அறுத்து தலையைத் துண்டித்து துடிக்க, துடிக்க கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகொலை குறித்து தானே தகவல் கொடுத்து காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.

நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியைக் கொன்று தீர்த்ததாக கூறியுள்ளார்.

திருமணமாகி 25 நாட்கள் கூட நிறைவடையாத நிலையில், சிறைக்காவலரைப் பீடித்த சந்தேக நோய் இளம்பெண்ணின் உயிரையே கொடூரமாக பறித்துள்ளது.