புதி­யவோர் அரசியலமைப்பு அவசியம் – அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை

புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பான தமது நிலைப்பாட்டை நான்கு பௌத்த பீடங்களும் மீள் பரி­சீ­லனை செய்ய வேண்டும் என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்போ, அர­சியல் அமைப்புத் திருத்­தங்­களோ தேவை­யில்லை என பௌத்த பீடங்கள் அண்மையில் தெரிவித்திருந்தது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல் இன மக்­க­ளையும், பல சம­யங்­க­ளையும் கொண்­டுள்ள இலங்­கைக்கு மத சுதந்­தி­ரத்­தையும் உரி­மை­க­ளையும் வழங்­கக்­கூ­டிய புதி­யவோர் அரசியலமைப்பு அவசியம் எனவும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை புதிய அரசியலமைப்பை வரவேற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெரும்பான்மை சமூகத்தின் உரிமைகள், அம்மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் என்பவை தொடர்பில் எமக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. அவற்றை நாம் எதிர்க்கவுமில்லை. என்றாலும் இலங்கையில் முஸ்லிம்களுக்குத் தனியான சட்டம் தேவையில்லை, தமிழர்களுக்குத் தேச வழமை சட்டம் தேவையில்லை என இனவாத அமைப்புக்கள் விவாதிப்பது தவறானதாகும். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பல்லின சமூகம் வாழும் நாட்டில் அனைத்து இன மக்களும் தமது சமயங்களை அனுஷ்டிப்பதற்கு உரிமையுண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.