புஜாரா அபார சதம்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா வலுவான ஓட்ட இலக்கு

இலங்கை இந்திய அணிகளுக்கியைடயிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேரம் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இலங்கை இந்திய அணிகளுக்கியைடயிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி தனது முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் சார்பில் தனது 50ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் புஜாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரஹானே 103 ஓட்டங்களுடனும், புஜாரா 128 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இதேவேளை, தவான் 35, ராகுல் 57, கோஹ்லி 13 என்ற அடிப்படையில் ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், ஹோரத் மற்றும் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் அடிப்படையில் கைப்பற்றிக்கொண்டனர்.

ஏற்கனவே காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.