புஜாராவுக்கு டெண்டுல்கார் புகழாரம்

புஜாரா ஒரு அமைதியான போர்வீரன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கார் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 21 எனக் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், அதன்பின் அபாரமாக விளையாடி தொடரைக் கைப்பற்றியது.

இந்தியாவின் வெற்றிக்கு புஜாராவின் அபார துடுப்பாட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மேலும் ஒரு சீசனில் அதிக ஓட்டங்கள் (1316) குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் காம்பீர் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இருந்தார்.

ராஞ்சியில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அத்துடன் அதிக பந்துகளை சந்தித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்தத் தொடரில் 7 இன்னிங்சில் ஒரு இரட்டை சதம், இரண்டு அரைசதங்களுடன் 405 ஓட்டங்களைப் குவித்தார். புஜாராவின் ஆட்டத்தை கண்டு வியப்படைந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், புஜாரா ஒரு சைலன்ட் வாரியர் என்ற புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில்,

புஜாரா அழுத்தமான மனோபாவம் கொண்ட அமைதியான போர்வீரன். கடந்த மூன்று மாதங்களாக அவரது ஆட்டத்தை உற்று கவனித்து வருகிறேன். அவரது ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டேன். புஜாரா நீண்ட காலம் விளையாடுவார் என்பது எனக்குத் தெரியும்.

சச்சின் டெண்டுல்கார்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் உமேஷ் யாதவ் அபாரமாக பந்து வீசி 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் இந்த சீசனில் தொடர்ந்து 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இது அவரது உறுதிப்பாட்டை காண்பிக்கிறது.

தொடர்ந்து 13 போட்டிகளில் உமேஷ் யாதவ் விளையாடியதுபோல் எந்தவொரு வீரரையும் என்னால் நினைவு கூர்ந்து பார்க்க இயலாது. நீண்ட சீசனில் விளையாடிய அனுபவம் அவரை மேலும் சிறந்த பந்து வீச்சாளராக மாற்றும். தரம்சாலாவின் 2ஆவது இன்னிங்சில் அவரது பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]