புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் பிறந்ததினமும், நினைவுதினத்தையும் முன்னிட்டு நினைவு தினம்

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் பிறந்ததினமும், நினைவுதினத்தையும் முன்னிட்டு நினைவு தினம்

புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் 21 ஆவது பிறந்த தினமான இன்று மாணவியின் மரணத்திற்கான நினைவஞ்சலியும், விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

மாணவி வித்தியா கல்வி கற்ற பாடசாலையான புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது

இந்த நிகழ்வினை முன்னால் நடிகையான சுகினிதா வீரசிங்க மற்றும் அவரது கணவர் களனி பல்கலைகழக விரிவுரையாளர் நந்தலால் மலான்கொட ஆகியோரால் யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியுடன் இணைந்து ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.

நாட்டில் இனி எங்கும் வித்தியாவுக்கு இடம்பெற்றது போன்றதான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்ற விழிப்புணர்வாகவும், அம் மாணவியின் மரணத்திற்கான அஞ்சலி நிகழ்வாகம் வித்தியாவின் 21 ஆவது பிறந்த தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது வித்தியாவின் உருவப்படத்திற்கு விருந்தினர்களும் பாடசாலை மாணவிகள் ஆசிரியர்கள் வித்தியாவின் நண்பர்கள் மற்றும் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோரும் மலர்துவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அதனை தொடர்ந்து வித்தியா நினைவாக குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த நடிகை மற்றும் விரிவுரையாளர் ஆகியோரது நிதி பங்களிப்புடனும் மற்றும் வதனி சங்கர் ஆகியோரது நிதி பங்களிப்புடனும் 284 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், சீருடைகளும் வழங்கப்பட்டன.

பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த ஒன்பது மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]