புகையிரத தொழில்நுட்ப ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

சம்பள உயர்வு உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் 48 மணித்தியால அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்க குழு அறிவித்துள்ளது.

அந்த குழுவின் தலைவர் பீ.சம்பத் ராஜித இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று மாலை 4 மணி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி மாலை 4 மணி வரை இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 12 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமது கோரிக்கைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்க குழுவின் தலைவர் பீ.சம்பத் ராஜித தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]