முகப்பு News Local News புகையிரத தொழிநுட்ப சேவையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

புகையிரத தொழிநுட்ப சேவையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

புகையிரத தொழிநுட்ப சேவை அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத தொழிநுட்ப முகாமைத்துவ உதவி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை நள்ளிரவு முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்; அவர் கூறியுள்ளார்.

புகையிரத தொழிநுட்ப சேவை அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உதவியாளர்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க குழுவொன்றை அமைப்பதாக தெரிவித்த போதும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குறித்த சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தாம் முன்னெடுக்கவுள்ள சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் காரணமாக புகையிரத சேவைகள் தாமதமடையும் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com