முகப்பு News Local News புகையிரத சாரதிகள் சங்கம் அதிரடி தீர்மானம்

புகையிரத சாரதிகள் சங்கம் அதிரடி தீர்மானம்

புகையிர ஊழியர்களின் பல்வேறு தொழிற்சங்கள் இணைந்து இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

புகையிர சாரதிகள், பாதுகாப்பு அதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் புகையிர அதிபர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

ஊதிய முரண்பாடுகளை தீர்ப்பதற்காக அமைச்சரவை பத்திரத்தை அமுல்படுத்துவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இதுவரை எந்தவித மாற்று முடிவுகளையும் எடுக்கவில்லை என, புகையிர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடம்கொட தெரிவித்துள்ளார்.

இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை காரணமாக சகல புகையிர சேவைகளும் தடைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அத்தியாவசிய புகையிர சேவையை நடத்துமாறு அதிகாரிகளிடம் இருந்து எந்தவித கோரிக்கைகளும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் இந்திக்க தொடம்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாட்டின் மீது அக்கறை இல்லாத அரச சேவையாளர்கள் இருக்கும் வரை மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை சரிசெய்ய முடியாது என, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், பேருந்து சேவைளை எதிர்காலத்தில் சக்திமயப்படுதத நடவடிக்கை எடுப்பதாகவும் புகையிர பயணிகள் பேருந்தில் செல்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த வியாழக்கிழமை புகையிர சாரதிகள் உள்ளிட்டவர்கள் முன்னெடுத்த 2 மணித்தியால பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் பாரிய சிரமங்களுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com