முகப்பு News Local News புகையிரத சாரதிகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

புகையிரத சாரதிகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

புகையிரத சாரதிகள் அதிகளவான சம்பளத்தை பெறும் நிலையில் சம்பள அதிகரிப்புக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், புகையிரத சாரதிகள் கொடுப்பனவுகள் உள்ளடங்களாக மாதாந்தம் 4 இலட்சம் ரூபாய்கும் அதிகமான சம்பளத்தை பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், புகையிரத ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com