புகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் பலி- வீடியோ உள்ளே

யாழ். அரியாலை நெளுக்குளம் புகையிரத கடவையில் புகையிரதத்துடன் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்.அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 40) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று (15) நண்பகல் 12.45மணியளவில் பயணித்த புகையிரதத்துடன் கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்று கொண்டிருந்த அதிசொகுசு புகையிரதம் யாழ் நெளுங்குளத்திலுள்ள புகையிரதகடவையில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் நெளுக்குளம் ஆட்டோ மாஸ்ரர் கராஜில் இருந்து பிரதான வீதியை நோக்கி வந்துகொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், கார் சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் செலலப்பட்டு வீசசப்பட்டு, கார் பலத்த சேதமடைந்ததுடன் கார் துண்டு துண்டாக புகையிரத கடவையில் வீசப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலளார்இ யாழ்.. மாவட்ட செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வருகைதந்து சம்பவத்தினைப் பார்வையிட்டனர்.

இவ்வாறு நேற்று விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவருடன் சுமார் 14 விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் புகையிரத கடவையில்இ சமிஞ்ஞை விளக்குப் பொருத்தப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்படவில்லை. இவ்வாறு கடந்த ஓரிரு மாதங்களின் முன்பும் மூன்று இளைஞர்கள் மோட்டார் சைக்களில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர்.

இவ்வாறு விபத்துக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றமையினால் புகையிரத திணைக்களம் மற்றும் உரிய அதிகாரிகள் மற்றும் புகையிரத திணைக்களத்தினர் இந்தப் பகுதியில் பாதுகாப்பு வேலி அமைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]