புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலி- வவுனியாவில் சம்பவம்

வவுனியா தான்டிக்குளம் – ஓமந்தைக்கு இடையில் உள்ள சாந்தசோலை சந்தியில் விபத்தில் ஒருவர் புகையிரதத்தில் இருந்து குதித்ததோ அல்லது தவறுதலாக கிழே விழுந்தோ மரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதத்தில் பயணித்த இளைஞர் ஒருவர்  இவ்வாறு பலியானதாக மேலும் அறியமுடிகின்றது.

இவர் யாழ்ப்பாணம் மருதனார் மடத்தை சேர்ந்தவர் எனவும் அவரது பெயர் டீபன்ஸ் அல்லது ஸ்டீபன் என அறிய முடிகிறது.

இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]