புகையிரதத்தில் மோதி, அவுஸ்திரேலியப் பிரஜையொருவர் பலி

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி, அவுஸ்திரேலியப் பிரஜையொருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த விபத்து, நேற்று அலவ்வ- வலகுபுர பகுதியில் வைத்து இடம்பெற்றதாகவும் சடலம், பொல்கஹவெல வைத்தியசாலைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலஸார் குறிப்பிட்டனர்.