தென்கொரியாவில் நடந்த கொரியன் ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கணை நோஸோமி ஒக்குஹாரா-வை வீழ்த்தி இந்தியாவின் பி.வி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

பி.வி சிந்து
இந்தியாவின் பேட்மின்டன் சாம்பியனான பி.வி சிந்து தென்கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற
கொரியன் ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கணை நோஸோமி ஒக்குஹாரா உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடந்த முதல் சுற்றில் முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் பி.வி சிந்து கைப்பற்றினார். இதனால், ரசிகர்களிடையே பி.வி சிந்து இரண்டாவது சுற்றில் அபாரமாக சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

ஆனால் இரண்டாவது சுற்றில் நோஸோமி ஒக்குஹாரா-வின் ஆவேச டெலிவிரிகளை எதிர்கொள்வதில் சிரமப்பட்ட சிந்து ஓரிரு முறை கால் இடறி சற்று சிரமப்பட்டார். இதனால், சற்று பின்னடைவை சந்தித்த சிந்து, 11-21 என்ற கணக்கில் இரண்டவது சுற்றை இழந்தார்.

பி.வி சிந்து
எனினும், நாட்டின் கெளரவத்தை நிலை நிறுத்த, சுதாரித்து சிலிர்த்தெழுந்த சிந்து 21-18 என்ற புள்ளிகள் கணக்கில் மூன்றாவது சுற்றை கைப்பற்றினார். இதன் மூலம் தங்கப்பதக்கத்தை தனது நாட்டிற்கு பெற்று தந்தார். வெள்ளிப்பதக்கத்தை ஜப்பான் வீராங்கணை நோஸோமி ஒக்குஹாரா வென்றார்.

இந்தியாவுக்கு மீண்டும் தங்கப்பதக்கம் பெற்று தந்த சிந்துவுக்கு பலதுறை பிரபலங்கள் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]