பிள்ளையான் மூலம் தமிழர்களின் வாக்குகளை பெற்ற தென்னிலங்கை அரசியல்வாதிகள்

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை விவகாரத்தில் தமிர்களின் வாக்குகளை பெற்று வந்த பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியும், இராஜாங்க அமைச்சர் எம்;.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் கல் உளி மங்கன்கள் போல் கண்ணை மூடிக் கொண்டிருப்பது ஏன் என தமிழ் உணவாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் கேள்வியெழுப்பியுள்ளார்..

தேர்தலில் காலங்களிலே பிள்ளையான் மூலமும் கணேசமூர்த்தி மூலமும் தமிழர்களின் வாக்குகளை அள்ளிச் சென்ற இவர்கள் மௌனம் காப்பது தமிழர்கள் மத்தியில் வெறுப்பையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை விவகாரம்; தொடர்பில் தெரிவிக்கையிலேயே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்!

கடந்த பொதுத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை பெற்று இன்று அரியாசனம் ஏறிக் கொண்டு தமிழர்கள் நடாத்தும் போராட்டத்தை கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக ஆங்காங்கே மக்கள் போராட்டங்கள் நடத்திய போது இது ஒரு சில அரசியல் வாதிகளின் சில்லறைத்தனமான போக்கு என்று அறிக்கை விட்ட பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக முழு மாவட்ட மக்களும் அனுஷ்டித்த ஹர்த்தால் பற்றி என்ன கருத்து கூறப் போகின்றார்.

தேர்தலில் காலங்களிலே பிள்ளையான் மூலமும் கணேசமூர்த்தி மூலமும் தமிழர்களின் வாக்குகளை அள்ளிச் சென்ற இவர்கள் மௌனம் காப்பது தமிழர்கள் மத்தியில் வெறுப்பையும் விசனத்தையும் ஏற்;படுத்தியுள்ளது.

வட மாகணத்திலே இருக்கின்ற பிரதி அமைச்சர் அங்கஜனுக்கே இதில் அக்கறை எடுக்க முடியுமென்றால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வாக்குகளை பெற்று வந்த இரண்டு அமைச்சர்களும் நித்திரையா செய்கின்றார்கள். தமிழர்கள் தானே எதிர்காலத்தில் தண்ணீர் இன்றி செத்து மடியட்டும் என்று விட்டு விட்டார்களா? இனி வரும் காலங்களில் ஒன்று மறியாத மிழ் பாமர மக்கள் சோளங்கொட்டையையும் மண்வெட்டியையும் வாங்கி கொண்டு இனி வரும் காலங்களில் துணை போக மாட்டார்கள் என்பதை எதிர்காலம் உங்களுக்கு கற்ப்பிக்கும்.

தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டமானது ஒரு இனத்திற்கோ மதத்திற்கோ எதிரான போராட்டம் அல்ல. புல்லுமலை சார்ந்த பிரதேசம் வானம் பார்த்து வயிறு பிழைக்கும் விவசாயிகள் வாழுமிடம். இந்த இடத்தில் நிலத்தடி நீரை விற்று பிழைக்க நினைப்பது ஒரு மனிதாபிமானமற்ற அடாவடித்தனமான செயலாகும்.

மக்களின் வாக்குகளை பெற்று வாழும் அரசியல்வாதியே இந்த நிலத்தடி நீரை விற்று பிழைப்பது ஓர் அற்பத்தனமான செயலாகும். முடியுமென்றால் தண்ணீர் தொழிற்சாலையை நிறுத்தி பாருங்கள் என்று சவால் விடும் அரசியல்வாதிக்கு தமிழ் உணர்வாளர்களின் தலைமையகம் விடுக்கும் செய்தி உங்களின் ஆணவ போக்கால் நாளாந்தம் வளர்ச்சியடையும் இந்த போராட்டம் இரு சமூகங்களுக்கிடையில் ஒரு விரிசல் நிலையை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

கடுவல நவகிரியவில் யானை சோடா தொழிற்சாலையால் அந்த பிரதேசத்தின் கிணறுகள் வற்றிய துர்ப்பாக்கிய நிலை எங்கள் சமூகத்திற்கும் ஏற்பட நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]