பிளவடைகிறது தேசிய அரசு : மைத்திரி – ரணில் ஆழ்ந்த யோசனை

தேசிய அரசில் அரசில் இருந்து 18 சு.கவின் அங்கத்தவர்கள் விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கவுள்ளதாக ஜனாதிபதியிடம் அறிவித்திருந்த நிலையில் இவர்களில் சிலர் கடந்த வாரம் கூட்டு எதிரணியுடன் ரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

தேசிய அரசை இரண்டாக பிளவுப்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றார்.

மக்கள் மத்தியிலும், நாட்டில் தொழிற்சங்கங்கள் மற்றும் சில அரச மற்றும் தனியார் தரப்பினருடன் அரசுக்கு ஏற்பட்டுள்ள முரண்பாடு மற்றும் நெருக்கடியை தமக்கு சதகமாக்கிக்கொள்ள மஹிந்தவின் விசுவாசிகளாக தேசிய அரசில் உள்ள சு.கவின் உறுப்பினர்களை இந்தத் தருணத்தில் தம் பக்கம் இழுத்துக்கொண்டால் மக்கள் மத்தியில் அரசு மேலும் நெருக்கடியான சூழல் ஏற்படுமென எதிரணியினர் நினைக்கின்றனர்.

அதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கும் படி கூறிவருகின்றனர். நாடாளுமன்றில் 95ஆசனங்களை மாத்திரமே சு.க வைத்துள்ளது. மஹிந்தவை பிரதமராக்க முடியாது என்று தெரிந்தும் மைத்திரியின் தரப்புக்கும், தேசிய அரசுக்கும் கடுமையான நெருக்கடியை கொடுக்கும் நோக்கில் தேசிய அரசில் உள்ள மஹிந்தவின் விசுவாசிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அதற்கு சு.கவின் மத்திய குழுவும் மைத்திரியும் வழிசமைக்காத நிலையிலேயே மேற்படி 18 பேரும் வெளியேற தீர்மானித்துள்ளனர். கடந்த வார இறுதியில் இவர்களுக்கும் மஹிந்த அரசின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவிருந்த அவரின் சகோதரர் பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று பத்தரமுல்லையில் இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் இவர்கள் வெளியேறும் தருணம் அதற்காக அரசுக்கு கொடுக்கவுள்ள அழுத்தங்கள் குறித்து ஆழமாக கலந்துரையாடப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் அதாவது எதிரணி ஆகஸ்ட் 8ஆம் திகதி பிரகடனப்படுத்தவுள்ள அரசு எதிர்ப்பு பிரகடனத்தில் ஒருசிலர் தேசிய அரசில் இருந்து வெளியேறி எதிரணியில் மோடையில் ஏற தீர்மானித்துள்ளனர்.

இவர்களின் வெளியேற்றத்தின் பின்னர் அரசின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாதுபோகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும். அப்போதும் தற்போதைய அரசு எத்தணிக்கும் அரசமைப்பு உள்ளிட்ட முக்கிய எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது போகும். அதன் அடிப்படையில் அரசுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து 2020 ஆண்டு தேர்தலை சந்தித்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தலில்மஹிந்த தரப்பு தமது அரசியல் பலத்தை நிரூபிக்கவே காய்கள் நகர்த்தப்படுகின்றன என்றும் அறிய முடிகிறது.

கடந்த வாரம் இடம்பெற்ற சு.கவின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தொடர்ந்தும் தேசிய அரசில் ஐ.தே.கவுடன் இணைந்து செயற்பட முடியாது. அவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் முடிவடைவதால் சு.க தனித்து செயற்பட வேண்டும் அல்லது தனித்து ஆட்சியமைத்து மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று 18 பேர் வலியுறுத்தினர்.

என்றாலும், எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை அரசில் தொடருமாறு ஜனாதிபதி இவர்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அரசு குறித்து மைத்திரியும் ரணிலும் ஆழ்ந்த சிந்தனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]