பில்கேட்ஸ்க்கு தொடரும் சோகம் – காரணம் உள்ளே….

ஒவ்வொரு ஆண்டும் ஹூரன் என்ற நிறுவனம் அதிக சொத்து மதிப்பு மிக்கவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் சென்ற ஆண்டு நம்பர்.1 பணக்காரரான அமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸ் தற்போது மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனரான இவரது சொத்து மதிப்பு தற்போது 90 பில்லியன் டாலர் என ஹூரன் நிறுவனம் கூறியுள்ளது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் இவரது சொத்து மதிப்பு வெறும் 11% மட்டுமே உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டுக்கான பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 71% உயர்ந்துள்ளது.. தற்போது இவரது சொத்து மதிப்பு 123 பில்லியன் டாலராகும்..

சென்ற ஆண்டில் இரண்டாம் இடத்தில் இருந்த அமெரிக்காவின் வாரென் பஃபெட் இந்த ஆண்டிலும் இரண்டாம் இடத்தையே பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 102 பில்லியன் டாலர் ஆகும்..அதாவது இந்த ஆண்டில் மட்டும் 31% உயர்ந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]