பிலிப்பைன்ஸில் தென் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் தென் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2-ஆக பதிவானது.பிலிப்பைன்ஸில்

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் தரப்பில், “பிலிப்பைன்ஸின் தென்பகுதியில் இன்று (சனிக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2-ஆக பதிவாகியது. மக்கள் உறங்கும் நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990-ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் 7.7-என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 2,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]