பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள சூறாவளியால் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள சூறாவளியால் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

வட பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள கடுமையான சூறாவளியால், 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

‘மங்குட்’ என்று பெயரிடப்பட்டுள்ள சூறாவளியே இவ்வாறு கடுமையாக தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ், ககாயன் மாகாணத்தை மங்குட் என்ற சூறாவளி கடுமையாக தாக்கியதால், அங்கு பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதோடு, கட்டங்கள் வீழ்ந்து, மரங்கள் முறிந்து விழுந்து பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனைதொடர்ந்து குறித்த சூறாவளியின் தாக்கத்தினால் நாட்டின் நான்கில் ஒரு பகுதி மக்களான 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அங்கு தொடர்ந்தும் கடும் காற்றுடன் மழை பெய்து வருவதால், மீட்பு பணிகளை மேற்கொள்ளவதில், பணியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிலிப்பைன்ஸில் பிலிப்பைன்ஸில் பிலிப்பைன்ஸில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]