பிலக்குடியிருப்பு காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பைச் சேர்ந்த 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 54 ஏக்கர் காணிகளில், 42 ஏக்கர் காணிகள், இன்று விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும், 42 ஏக்கர் காணியும் தற்போது முழுமையாக விடுவிக்கப்பட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், பிலக்குடியிருப்பு காணிகள் இன்று விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டபோதும், விடுவிக்கப்பட்ட போது, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் முழுமையான காணிகள் விடுவிக்கப்படவில்லை. பகுதியளவிலேயே இன்று காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனால், தமது காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.