பிற்பகல் 2 மணிவரையான வாக்களிப்பு நிலவரம்

340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகியது.

இன்று பிற்பகல் 2.00 மணி விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்களிப்பில் 50 சதவீதத்துக்கும் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

களுத்துறை, மாத்தறை, ஆகிய மாவட்டங்களில் 55% வாக்குப் பதிவும், கம்பஹா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் 65% வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் மாவட்டத்தில் 69% வாக்குப் பதிவும், அநுராதபுரம் மாவட்டத்தில் 60% வாக்குப் பதிவும், பொலன்னறுவை மாவட்டத்தில் 63% வாக்குப்பதிவும், இரத்தினபுரி மாவட்டத்தில் 60%வாக்குப் பதிவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]