பிரேசில் சிறையில் வன்முறை 50 க்கும் மேற்பட்டோர் பலி

பிரேசிலின் அமேஸோனாஸ்  மாநிலத்திலுள்ள   சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 50 க்கும் மேற்பட்ட கைதிகள்   உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிரேசிலின் அமேஸோனாஸ் மாநிலத்திலுள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 50 க்கும் மேற்பட்ட கைதிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுகிழமை ஏற்பட்ட அமையின்மை இன்றைய தினம் வரை நீடித்தாகவும் பின்னர் பணயக்கைதிகளாக பிடித்துவைத்திருந்த 12 அதிகாரிகளை விடுத்ததுடன் ஆயுதங்களுடன் சிறைக்கைதிகள் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கலகதடுப்பு பிரிவினருக்கும் கைதிகளுக்குமிடையில் மோதல் ஏற்பட்டதாகவும் அதன்போது கைதிகள் சிலர் தப்பிசென்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகிலுள்ள சிறைச்சாலைகளில் நான்காவதாக அதிகளவான சிறைக்கைதிகள் பிரேசில் சிறைகளிலேயே உள்ளனர். அங்கு சுமார் ஆறு இலட்சம் கைதிகள் காணப்படுகின்றனர்.