பிரேசில் அதிபர் தேர்தல் வேட்பாளர் மீது கத்தி குத்து: வீடியோ உள்ளே…

பிரேசில் அதிபர் தேர்தல் வேட்பாளர் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் ராணுவ தளபதி ஜெர் போல் சோனரோ பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மினாஸ் ஜெரேய்ஸ் மாகாணத்தில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட இவர், மக்களோடு மக்களாக கைகளை உயர்த்திய உரையாற்றிக் கொண்டிருந்தார்.

இதன்போது மர்ம நபர் ஒருவர் அவரது வயிற்றில் கத்தியால் குத்தியதை தொடர்ந்து, அவர் மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து  அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

உடனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 2 மணி நேரம் சத்திரசிகிச்சை நடத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது அவர் உடல்நிலை தேறியுள்ளதாக அவரது மகன் பிளாவியோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரேசில் அதிபர் பிரேசில் அதிபர்

இதற்கிடையே போல் சோனரோவை கத்தியால் குத்திய நபரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளதோடு, குறித்த நபரின் பெயர் அடெலியோ ஒபிஸ்போ டி ஒலி வேஸ்ரோ என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கத்திக்குத்து சம்பவத்துக்கு பிரேசில் அதிபர் மைக்கேல் டேமர், முன்னாள் அதிபர் லுலா டா சில்வா மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முன்னாள் ராணுவ தளபதி ஜெர் போல் சோனரோ (63) போட்டியிடுகிறார்.

இவர் சோசியல் லிபரல் கட்சியை சேர்ந்தவர். இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இவர் முன்னணியில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]