பிரெட் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்…!

பிரெட் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்…!

டீ, கோபியுடன் சாப்பிட ஸ்நாக்ஸ் பிரெட் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பிரெட் – 5 துண்டுகள்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
இஞ்சி துண்டு – சிறிய துண்டு
மிளகாய் – 3
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய், தண்ணீர்- தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

* ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும். பிரெட்டை துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* பிரெட் துண்டுகளுடன் வெங்காயம், இஞ்சி, மிளகாய், உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்துகொள்ளவும்.

* பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பிரெட் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக பரவலாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இப்போது சுவையான பிரெட் பக்கோடா ரெடி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]