பிரெக்சிற் எதிர்ப்பு ஆர்வலர்கள் லண்டனில் போராட்டம்

பிரெக்சிற் எதிர்ப்பு ஆர்வலர்கள் லண்டனில் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

உடன்பாடற்ற பிரெக்சிற்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களுக்கு எதிராக பிரெக்சிற் எதிர்ப்பு ஆர்வலர்கள் இந்த போராட்டத்தை நேற்று (புதன்கிழமை) முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் அடங்கிய பெட்டிகள் மற்றும் கொள்கலன்களுடன், லண்டனிலுள்ள சுகாதார திணைக்களத்திற்கு முன்காக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது, ‘எமது எதிர்காலம் எமது தெரிவு’ என்ற இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டதாகவும், உடன்பாடற்ற பிரெக்சிற்றிற்கான சாத்தியமே அதிகமாகக் காணப்படுவதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகளுக்கு அமையவே முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடன்பாடற்ற பிரெக்சிற்றுக்கு தயாராகும் வகையில், பிரித்தானிய அரசாங்கம மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை சேகரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]