பிரியா வாரியரை பின்னுக்கு தள்ளிய ராகுல் காந்தி- என்ன ஒரு சிமிட்டல்??

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் கண் சிமிட்டல், பிரியா வாரியரின் சிமிட்டலைப்போல இருந்தமையைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.

மலையாளத்தில் புதுமுகங்களான பிரியா வாரியர், ரோஷன் அப்துல் ரகூப் நடிப்பில் ‘ஒரு அடார் லவ்’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி உலகமெங்கும் திரைக்கு வர உள்ள இந்தப் படத்தில் ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல் காட்சியின் மூலம் கண்சிமிட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வசப்படுத்தியவர் ப்ரியா வாரியர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

விவாதத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு ஏவுகணைகளை ஏவினார்.

அந்த ஆவேச பேச்சைத் தொடர்ந்து நேராக அவர் பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்று, அவரை தழுவினார்.

அதைத் தொடர்ந்து தன் இருக்கைக்கு திரும்பிய ராகுல் சபையை நோக்கி, “பிரதமருக்கு எதிராக என்னிடம் நிறைய வெறுப்புணர்வு இருக்கிறது என நீங்கள் எல்லாம் நினைப்பீர்கள். அப்படி எதுவும் கிடையாது.

இந்தியன் என்பதற்கு அர்த்தத்தை, இந்து என்பதற்கான அர்த்தத்தை, சிவபக்தன் என்பதற்கான அர்த்தத்தை மோடியும், பாரதீய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்தான் எனக்கு கற்றுத்தந்தன.

இதற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன்” என்று சொல்லி விட்டு அவர் கண் சிமிட்டினார்.

அவரது கண் சிமிட்டல், பிரியா வாரியரின் சிமிட்டலைப்போல இருந்தமையைத் தொடர்ந்து இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாராட்டுக்களையும், விமர்சனங்களையும், மீம்ஸ்களையும் அள்ளியது.

இதில் பிரியா வாரியரை ராகுல் காந்தி பின்னுக்கு தள்ளினார்.

“வெளியே வாருங்கள் பிரியா வாரியர்… உங்களுக்கு ராகுல் காந்தி பலத்த போட்டியாக வந்து விட்டார்” என்று சமூக வலைத்தளங்களில் கூறுகிற அளவுக்கு நிலைமை போனது. இது பிரியா வாரியரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]