பிரியா வாரியருக்கு அடித்த அதிர்ஷ்டம் – முழுவிபரம் உள்ளே!!

“ஒரு அடார் லவ்” படத்தில் இடம்பெற்ற “மாணிக்ய மலராய பூவி” பாடலில் தனது புருவ நெளிப்பு, கண் சிமிட்டல் மூலம் ரசிகர்களை ஈர்த்த பிரியா வாரியர் மிகவும் பிரபலமாகி விட்டார்.

ஆனால், “ஒரு அடார் லவ்” திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் அவர் அடுத்து மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், தமிழில் ரசிகர்களைக் கொண்டிருக்கும் அவரை கோலிவுட்டுக்கு அழைத்து வரும் வேலைகளும் நடக்கிறதாம்.

இந்நிலையில், நடிகர் சித்தார்த், பிரியா பிரகாஷ் வாரியருடன் இணைந்து எடுத்த செல்ஃபி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனது புதிய படத்தில் அவரை கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக இவர் பிரியா வாரியரை சந்தித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், சமீபத்தில் தான் மலையாளத்தில் நடித்துள்ள முதல் படமான ”கம்மார சம்பவம்” படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்காக கேரளா வந்து சென்றார் சித்தார்த். அப்போது யதார்த்தமாக பிரியா வாரியரை சந்தித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சித்தார்த் தமிழ் சினிமா ஸ்ட்ரைக்கில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் எனக் கூறிவிட்டு, மலையாளப் படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொண்டது நியாயமா..? எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]