முகப்பு Cinema பிரியங்கா சோப்ராவுக்கும், நிக் ஜோனஸ் ஆகிய இருவருக்கும் விரைவில் திருமணமாம்

பிரியங்கா சோப்ராவுக்கும், நிக் ஜோனஸ் ஆகிய இருவருக்கும் விரைவில் திருமணமாம்

பிரியங்கா சோப்ரா விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக பாலிவுட் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர், அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ள பாரத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தில் சல்மான் கான் ஐந்து வேடங்களில் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், பிரியங்கா சோப்ரா இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டதாக இயக்குநர் ஜாஃபர் இன்று (வெள்ளிக்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இத்துடன் பிரியங்கா சோப்ரா விரைவில் திருமணம் செய்யப்போகிறார் என்ற மகிழ்ச்சி செய்தியையும் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ஜாஃபர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

தனது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த பிரியங்கா சோப்ரா, தற்போது அதிலிருந்து விலகியிருக்கிறார். இதன்மூலம் திருமண வாழக்கையை தொடங்கும் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

மேலும், பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் ஆகிய இருவரின் காதல் திருமணம் மகிழ்ச்சியுடன் அமைய, பாரத் படக்குழுவின் சார்பில் தனது மணமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com