பிரியங்கா சோப்ராவிற்கும் பொப் பாடகருக்கும் திருமண நிச்சயதார்த்தம்

பிரியங்கா சோப்ராவிற்கும் பொப் பாடகருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நேற்று இடம்பெற்றுள்ளது.

பொலிவூட் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கும் அவரது காதலரான பொப் பாடகர் நிக் ஜோனசிற்கும் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

35 வயதான ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்காவை சேர்ந்த பொப் பாடகர் நிக் ஜோனசும் காதலித்து வந்த நிலையில், இவர்கள் காதலை இரு வீட்டிலும் ஏற்றுக் கொண்டனர்.

அண்மையில் நிக் ஜோனஸை மும்பைக்கு அழைத்து வந்து தனது குடும்பத்தினரிடம் பிரியங்கா சோப்ரா அறிமுகம் செய்து வைத்ததாக தகவல் வெளியாகியதை தொடர்ந்து, இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ராவின் இல்லத்தில் இவர்கள் இருவருக்கும் இந்திய முறைப்படித் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மாத்திரமே கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

பிரியங்கா சோப்ராவிற்கும் பொப் பாடகருக்கும்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]