பிரித்தானிய பாராளுமன்ற சர்வகட்சி குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

பிரித்தானிய பாராளுமன்ற சர்வகட்சி குழு

இலங்கை தொடர்பான பிரித்தானிய பாராளுமன்ற சர்வகட்சி குழுவினர் இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

பிரித்தானிய கொன்ஸர்வேட்டிவ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை பிரஜையுமான ரணில் ஜயவர்தன இக்குழுவின் தலைவராக செயற்படுகின்றார்.

புதிய தொழில்நுட்பம், வேலை வாய்ப்புக்களை அதிகரித்தல் மற்றும் கல்வி வாய்ப்புக்களை மேலும் பயனுள்ளதாக்குவதற்கு இரு நாடுகளுக்கிடையேயும் காணப்படும் தொடர்புகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி அவர்களிடம் இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ளதுடன் அதனுடன் இணைந்ததாக இரு நாட்டு உறவுகளை மேலும் உறுதி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரித்தானிய தூதுக்குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]