பிரித்தானியரின் பாரிய பீரங்கிகள் திருகோணமலையில் மீட்பு

திருகோணமலை

பிரித்தானியர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மேலும் இரண்டு பாரிய பீரங்கிகள் ‘திருகோணமலை’யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை வைத்தியசாலை விபத்து சிகிச்சைப் பிரிவுக்கான புதிய விடுதியை அமைப்பதற்காக குழி தோண்டிய போது, பாரிய பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்தப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது, மண்ணில் புதைந்து கிடந்த மேலும் இரண்டு பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பீரங்கிகள் அனைத்தும் பிரித்தானியர் காலத்தில் பயன்படுத்தப்பட்டவை என்று தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுமணதாச தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]