பிரிதானிய இளவரசர் எட்வர்ட் இன்று வருகிறார்

பிரிதானிய இளவரசர் எட்வர்ட்

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தில் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளும் பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் எட்வர்ட், இன்று மாலை இலங்கைக்கு வரவுள்ளார்.

இளவரசர் எட்வர்ட், இரண்டாவது எலிசபெத் மகாராணி மற்றும் எடிம்பரே கோமகன் பிலிப்ஸ் ஆகியோரின் இளைய புதல்வர் ஆவார்.

இலங்கை வரும் இளவரசர் சமூக நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதுடன் சில இடங்களுக்கும் விஜயம் செய்ய உள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இளவரசர் எட்வர்ட் மற்றும் அவரது மனையியான இளவரசி சோபி ஆகியோர் நாளைய தினம் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட உள்ளதுடன், பேராதனை தாவரவியல் பூங்காவுக்கும் செல்லவுள்ளனர்.

இளவரசர் மற்றும் இளவரசி ஆகியோர் எதிர்வரும் 3ஆம் திகதி இரத்மலானை பார்வையற்றோர் பாடசாலையில் நடைபெறும் மாணவர்களின் கண்காட்சி மற்றும் கலாசார நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]