பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்

பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்

பிரிக்க முடியாத நாட்டுக்குள் எமது மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் சுதநதிரமாக வாழ்வதையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அந்த அடிப்படையில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்புக்கு பாராளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை வழங்காமல் மக்கள் தீர்ப்பும் நிராகரிக்கப்படுமானால் தமிழ் மக்களுக்கு உள்நாட்டுப் பொறிமுறையில் தீர்வு கிடைக்காது சர்வதேச பொறிமுறையின் கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை காண வேண்டும் என்ற சூழ்நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு சனிக்கிழமை (12) நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

வீடமைப்பு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு உடன்பாட்டுடன் நிபுணர்குழு அறிக்கையை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் ஒரு தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இனத்துவம் மதத்துவம் என்பவற்றுக்கு அப்பால் இந்த நாட்டில் சகல மக்களும் சமத்துமாக வாழவேண்டும்.

காணி மற்றும் பொலிஸ் அதிகதரத்தை உள்ளடக்கிய தீர்வுத் திட்டம் வரவேண்டும். எங்களது எல்லைக்குள் மக்கள் சுயநிர்ணயத்தோடு வாழவேண்டும். புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறவேண்டும் மக்கள் தீர்ப்புக்கு விடுகின்ற போது ஐம்பது சதவீதத்துக்கும் மேலான மக்கள் ஆணை வழங்க வேண்டும்.

புதிய அரசியலமைப்புக்கு பாராளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை வழங்காமல் மக்கள் தீர்ப்பும் நிராகரிக்கப்படுமானால் தமிழ் மக்களுக்கு உள்நாட்டுப் பொறிமுறையில் தீர்வு கிடைக்காது சர்வதேச பொறிமுறையின் கீழ் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை காண வேண்டும் என்ற சூழ்நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும்.

எதிர்வரும் காலத்தில் கம்பெரலிய திட்டத்தில் 300 மில்லியன் ரூபா நிதி வரவுள்ளது இதன்மூலம் மாவட்டம் பூராகவும் வீதிகள் உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]