பிரிகேடியர் பிரியங்க மீதான இலங்கையின் விசாரணைக்கு பின்னர் பிரித்தானியா நடவடிக்கை

பிரிகேடியர் பிரியங்க பெர்னோன்டோவுக்கு எதிரான விசாரணைகளை அரசாங்கம் முடிக்கும் வரை, நிறைவு செய்யும் வரை மேலதிக நடவடிக்கைகளை பிரித்தானியா எடுக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் இதனை அறிவித்துள்ளது.

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை நோக்கி, கழுத்தை அறுத்து விடுவேன் என்பது போல, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ அச்சுறுத்தியமை பாரிய சர்சைகளை ஏற்படுத்தியது.

அதனையடுத்து, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், லண்டனில் தங்கியுள்ள அவரது மனைவி, பிள்ளைகளையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை கோரியிருந்தது.

இதுகுறித்து கொழும்பில் உள்ள பிரித்தானியத் தூதரகத்திடம் ஊடகங்கள் கேள்வியெழுப்பிய நிலையில், அதற்கு தூதரகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

“லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு வெளியே நடந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுடன் அரசாங்கம் தற்போது கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது. அரசாங்கம் இந்த விசாரணைகளை முடிக்கும் வரை, இதுபற்றி பிரித்தானியா கருத்து வெளியிடுவதோ, மேலதிக நடவடிக்கை எடுப்பதோ பொருத்தமானது அல்ல” என்று இந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]