பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் இமானுவல் மக்ரான் வெற்றி

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் வெற்றிபெற்று பிரான்ஸின் அரசியல் வரலாற்றை மாற்றியமைத்துள்ளார்.

1958ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடாளுமன்ற ஆட்சிமுறைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் முதல் முறையாக மாற்றுக் கட்சியொன்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து பிரான்ஸின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் இறுதி முடிவுகள் நேற்று வெளியானது.

இதில் இமானுவல் மக்ரான் 65 சதவிகித வாக்குகளுடன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மெரீனை வீழ்த்தினார்.

பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற மக்ரானுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]