பிரான்சில் மசூதி அருகே மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்

தெற்கு பிரான்சில் அவிக்னான் பகுதியில் அர்ராமா என்ற மசூதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் மசூதியில் அங்கு வந்த 2 மர்ம வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இத்தாக்குதல் தீவிரவாதத்தால் நடைபெற்றது இல்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் இத்தாக்குதல் நடைபெற்றது என்றார்.

பாரீஸ் புறநகரான கிரேடில் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மசூதி அருகே கூட்டத்தினர் மீது கார் ஏற்றிய நபர் கைது செய்யப்பட்டார். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் பிரான்சின் முக்கிய நகரங்களில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]