பிராந்திய பாதுகாப்புக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் ; ஜப்பானில் பிரதமர் தெரிவிப்பு

பிராந்திய பாதுகாப்புக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிழக்காசியா மற்றும் பெங்கால பொக்கையை அண்டிய நாடுகளின் சனத்தொகை அடுத்துவரும் 20 வருடங்களில் 250 மில்லியனை எட்டவுள்ளது.

அந்த சனதத்தொகையை இலக்கு வைத்து மூலதனம் மற்றும் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டியது ஜப்பானிய அரசின் கடமை மாத்தரமல்ல ஜப்பானிய வர்த்தகர்களினதும் பிரதான கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் அங்குள்ள வர்த்தக பிரமுகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

பூகோள நிலைமைகளையும், ஜப்பானின் முக்கியத்துவத்தையும் இலங்கை விளங்கிக் கொண்டுள்ளது. பிராந்திய அமைதி மற்றும் உறுதிப்பாட்டைப் பாதுகாக்க இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது.

இலங்கையின் அனைத்து துறைமுகங்களினதும் பாதுகாப்பு இலங்கையின் கடற்படையின் வசமே இருக்கும். அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ துறைமுகமாக இருக்காது. இலங்கை கடற்படையும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளுமே இதன் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருக்கும்.

சீன நிறுவனத்துக்கும் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் கூட்டு முயற்சி உடன்பாடு, எந்தவொரு வெளிநாடும் துறைமுகத்தை இராணுவத் தேவைக்காக பயன்படுத்துவதை தடுக்கும் வகையிலானதாக இருக்கும்.

எந்தவொரு போர்க்கப்பலும் துறைமுகத்துக்கு வர முடியும். இலங்கை அரசாங்கம் அதற்கு அனுமதி அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]