பிரம்மாண்டமாக வெளியானது 2.O திரைப்படத்தின் டீஸர்

பிரம்மாண்டமாக வெளியானது 2.O திரைப்படத்தின் டீஸர்

அதிக முதலீட்டில் இந்தியத் திரைப்பட வரலாற்றில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் திரைப்படம் 2.O.

இரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் 2.O டீஸர் இன்று (வியாழக்கிழமை) 9.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

லைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகிவரும் 2.O திரைப்படத்தின் டீஸரானது முதன்முறையாக 3Dயில் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’.

இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‘2.O’ படத்தில் ரஜினிகாந்த், பொலிவுட் நடிகர் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஏற்கனவே இரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், விநாயகர் சதுர்த்தி நாளான இன்று 2D மற்றும் 3D யில் வெளியாகியுள்ள 2.O டீஸரும் இரசிகர்களின் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பிரம்மாண்டமாக வெளியானது பிரம்மாண்டமாக வெளியானது பிரம்மாண்டமாக வெளியானது பிரம்மாண்டமாக வெளியானது பிரம்மாண்டமாக வெளியானது பிரம்மாண்டமாக வெளியானது பிரம்மாண்டமாக வெளியானது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]