பிரம்மாண்டமாக நடைபெற்ற சிரஞ்சீவி – நயன்தாரா திருமணம்- வைரல் புகைப்படம் உள்ளே!!

மல்ட்டி ஸ்டார் படமாக உருவாகி வரும் ”சைரா நரசிம்ம ரெட்டி” படத்தில் சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர்.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

அதாவது, சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் வரலாற்றுப் படமாக உருவாகி வரும் ”சைரா நரசிம்ம ரெட்டி” மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இது சிரஞ்சீவியின் கேரியரில் 151-வது படமாம். ”கொனிடேலா புரொடக்ஷன் கம்பெனி” நிறுவனம் சார்பில் சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இதற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்திற்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு படம் தாமதமானதால் வெளியேறினார். தற்போது இசையமைக்க அமித் திரிவேதியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

அண்மையில், துவங்கிய படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெறுகிறது. இதில் அமிதாப் பச்சன் முற்றிலும் வித்தியாசமாக ஒரு யோகியின் தோற்றத்தில் உள்ளனர். இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

 

சமீபத்தில் நடந்த ஷூட்டிங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா திருமணம் நடைபெறுவது போல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]