பிரபு தேவாவின் புது காதலி யார் என்று தெரியுமா?

புதுமுக நடிகையாக வந்துள்ளவர் தேஜாஸ்வனி. இவருடன் பிரபுதேவா காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் கிசு கிசு செய்திகள் கிளம்பியுள்ளன. பிரபுதேவா ஏற்கனவே நயன்தாராவுடன் காதல் கொண்டார்.

இவருக்கும் நயன்தாராவுக்கும் இடையேயான காதல் முறிவடைந்தபின் அவர் பல பெண்களுடன் சேர்த்து கிசுகிசுக்கள் கிளம்பின. இதில் ஹிந்தி நடிகையான சோனாக்ஷி சின்காவுடன் காதல் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இந்த விஷயத்தை தொடர்ந்து அவர்கள் இருவரும் கூறுகையில் முற்றிலும் இல்லை என மறுத்தனர்.

இந்நிலையில் தற்போது அவர் புதுமுக நடிகையான தேஜாஸ்வனியுடன் காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசும் இடம் நட்சத்திர ஹோட்டலாம்.

இவர்கள் இருவரும் பேசிய காட்சியை சில நடிகர்கள் பார்த்து விட்டனர். இதனாலேயே இந்த விஷயம் வெளிவரத் தொடங்கியுள்ளது. இது பற்றி தேஜாஸ்வனி கூறுகையில் தான் விருந்தில் பங்கேற்க சென்றதாகவும்,

அதில் நிறைய நடிகை நடிகர்கள் இருந்ததாகவும், பிரபுதேவா எனக்கு நண்பர்கூட இல்லை. பின் எப்படி அவரை காதலிக்கிறேன் என்றும் கூறினார். இது முற்றிலும் பொய் எனவும் கூறினார்.