பிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா

பிரபுதேவாவுடன் கைகோர்க்கும் நந்திதா

‘அட்டகத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. இதன்பின்னர் பெரிய அளவில் இவர் ஜொலிக்காவிட்டாலும், ‘எதிர்நீச்சல்’, ‘முண்டாசுபட்டி’ போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில், பல முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடிக்காமல் இருந்த நந்திதா, முதன்முறையாக பிரபுதேவா நடிக்கும் தேவி 2 படத்தில் நடிக்க உள்ளார்.

தேவி படத்தின் முதல் பாகத்தில் பிரபுதேவா ஜோடியாக தமன்னா நடித்திருந்த நிலையில், தற்போது நந்திதா நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

தேவி படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகும் இந்த படத்தையும் இயக்குநர் விஜய் இயக்குகிறார்.

சமீபத்தில் ‘தேவி 2’ படத்தின் படப்பிடிப்பு மொரீசியசில் தொடங்கியதாக பிரபுதேவா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவாவுடன்

பிரபுதேவாவுடன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]