பிரபுதேவாவிற்கு வில்லனாக மாறிய பாகுபலி பட வில்லன்

பிரபுதேவாவிற்கு வில்லனாக மாறிய பாகுபலி பட வில்லன்

பிரபுதேவா தற்போது கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘எங் மங் சங்’. பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க, ஏனைய கதாபாத்திரங்களில் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்திராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா போன்ற நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு வில்லாக பாகுபலி வில்லன் பிரபாகர் நடிக்கவுள்ளாராம்.

சண்டைகளை கற்று கொடுக்கும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக பாகுபலி வில்லன் பிரபாகர் நடிக்கிறார்.

அர்ஜுன்.எம்.எஸ். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.

பிரபுதேவாவிற்கு பிரபுதேவாவிற்கு பிரபுதேவாவிற்கு பிரபுதேவாவிற்கு பிரபுதேவாவிற்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]