பிரபாகரனுக்கு நந்திக்கடலில் நினைவுத்தூபி பொதுபலசேனவின் கருத்தை வரவேற்கிறோம் – தமிழரசுக் கட்சி

பிரபாகரனுக்கு
gnanasara

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நந்திக்கடலில் நினைவுத் தூபி அமைத்திருக்க வேண்டும் என பொதுபலசேன அமைப்பைச் சேர்ந்த பௌத்தபிக்கு ஒருவர் கூறியுள்ளார்.இந்த கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் இது துட்டகைமுனு மன்னன் அன்று கையான்ட விடயம் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறோம்’ – இவ்வாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சி பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட 27ஆவது ஆண்டு நினைவேந்தல் கடந்த புதன்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடரந்து உரையாற்றுகையில் – “எல்லாளன் என்ற தமிழ் மன்னனின் வீரத்துக்கு தலைவணங்கி அவருக்கு தூபி அமைத்து வணக்கம் செலுத்த வேண்டும், அந்த இடத்தில் ஓசையிடாமல் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டு 2,200 ஆண்டுகளுக்கு முன்பு துட்டகைமுனு மன்னன் சரித்திரத்தில் பதித்த அந்த நிகழ்வினை இந்த நாட்டு அரசு ஏன் தற்போது பதிக்க முடியாது.

k thurairajasingam
K.Thurairajasingam

உலக நாடுகளில் போரில் ஈடுபடுபவர்கள் வீரர்கள் என்று கருதப்படுகிறார்கள். அவர்கள் பயங்கரவாதிகள ; என எங்குமே பொறிக்கப்பட்டது கிடையாது. தனது கறுப்பு இன மக்களுக்காக போரடியபோது நெல்சன் மண்டேலா பயங்கரவாதி என பொறிக்கப்பட்டார். ஆனால் அவர் சிறையிலிருந்து வந்தபோது அவர் விடுதலை வீரனாகத்தான் உலக வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளார்.

இனவிடுதலைக்காக போராடிய எல்லா மக்களும் வீரர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றர்கள். இலங்கை இராணுவமும் வீரர்களாக பொறிக்கப்படலாம் அதுபற்றி நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கப்போவதில்லை.

இந்த விடயத்தில் நீதி காணப்பட வேண்டும். எவ்வாறு நடைபெற்றது இதற்கு ஆணையிட்டவர் யார்? ஏந்தவகையில் அந்த ஆணை இருந்தது, என்ற விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு சர்வதேச நியமங்களின் அடிப்படையில் முடிவு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு -என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]