பிரபல ஹீரோயின்களுக்கு எதைக்கண்டால் பயம்?

பிரபல ஹீரோயின்களுக்குஉலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பயம் இருக்கும். சிங்கத்தில் ஆரம்பித்து சிறு வண்டாக கூட இருக்கலாம் அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோயின்களுக்கு எதைக்கண்டால் பயம் தெரியுமா?

தமன்னா

தமன்னாவிற்கு உயரமான பகுதி என்றால் மிகவும் பயமாம். உயரமான இடத்தில் ஷுட்டிங் என்றாலே ஒரு பதட்டத்துடன் தான் இருப்பாராம்.

த்ரிஷா

த்ரிஷா என்ன தான் அரண்மனை-2 போன்ற பேய் படங்களில் நடித்தாலும் அவர் பேய் படங்களை மட்டும் பார்க்கவே மாட்டாராம். பேய் என்றால் மிகவும் பயமாம்.

ஹன்சிகா

ஹன்சிகா மிகவும் சுத்தமானவர். அதன் காரணமாகவே எந்த ஒரு பொருளையும் தொடுவதில் இருந்து சாப்பிடுவது வரை ஒரு பயத்துடன் தான் இருப்பாராம். இன்ஃபெக்‌ஷன்ஸ் ஆகக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பாராம்.

காஜல் அகர்வால்

காஜலுக்கு பறவைகள் என்றாலே மிகவும் பயமாம். இப்படி ஒரு பயம் தனுஷிற்குமே உள்ளது. ஆனால் இவர்கள் இருவருமே மாரி படத்தில் புறாக்களுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது.

டாப்ஸி

டாப்ஸிக்குமே பேய் படங்கள் என்றால் தான் பயமாம். இதுநாள் வரை தான் நடித்த காஞ்சனா-3 யை கூட இவர் பார்க்கவில்லையாம்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]