பிரபல ஹிந்தி தொலைக்காட்சி நடிகர் திடீர் மரணம்

ஹிந்தி தொலைக்காட்சி நடிகர்

பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் பரஞ்பே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில் மில் கயி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான கரண் பரஞ்பே(26), அந்த நிகழ்ச்சியில் அவர் ஜிக்னேஷ் என்ற ஆண் நர்ஸாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதில் இருந்து ரசிகர்கள் அவரை ஜிக்னேஷ் என்றே அழைத்து வந்தனர்.

மும்பையில் வசித்து வந்தார் கரண். அவர் தனது வீட்டு படுக்கையறையில் பிணமாகக் கிடந்ததை அவரது தாய் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கண்டுபிடித்தார்.

கரணுக்கு தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரணின் மரண செய்தி அறிந்து அவருடன் நடித்த கலைஞர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.

ஏன் கரண் அதற்குள் சென்றுவிட்டீர்கள். அப்படி என்ன அவசரம். உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவோம் என்று அவருடன் நடித்த கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]