பிரபல வில்லன் நடிகர் கொல்லம் அஜீத் திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகினர்!!

பிரபல வில்லன் நடிகர் கொல்லம் அஜீத் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 56.

மலையாளத்தில் 90-களில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் கொல்லம் அஜீத். தொடர்ந்து நடித்து வந்த அவர், மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், கடந்த சில மாதங்களாக வயிற்றுப் பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.40 மணிக்கு மரணமடைந்தார். அவரது உடலுக்கு மலையாள நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த கொல்லம் அஜீத்துக்கு பிரமீளா என்ற மனைவி, காயத்ரி என்ற மகள், ஸ்ரீஹரி என்ற மகன் உள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]