பிரபல போதைப்பொருள் வியாபாரி ஜீவன் மல்லி கைது

பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஜீவன் மல்லி விசேட அதிரடிப் படையினரால் மாகொலயில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் வியாபாரியான ஜீவன் மல்லியை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து 5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றட்ட போதைபொருளின் பெறுமதி சுமார் 60 மில்லியன் ரூபாவென பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]