பிரபல போதைப்பொருள் வர்த்தகர் மஞ்சு கைது

ராகமை பெரலந்த வீதியருகிலுள்ள ஏரிக்கருகில் வைத்து பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மஞ்சு,பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று பகல் கைதுசெய்யப்பட்டு நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது நீதவான் அவரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்குட்படுத்தவும் உத்தரவிட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுவத்த ராகமையைச் சேர்ந்த 41 வயதுடைய பிரியந்த ஜயலால் எனப்படும் மஞ்சுவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்யத வேளையில் அவரிடமிருந்து 109 கிராம் 94 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் பயன்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளொன்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்தே குறித்த சந்தேகநபரை இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதவான் அவரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]