பிரபல பாடசாலை மாணவர்களை துரத்தி துரத்தி தாக்கிய பொலிஸ் – அதிர்ச்சி வீடியோ உள்ளே!!

குருணாகலில் பாடசாலை மாணவர்களை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் துரத்தித் துரத்தி தாக்கியுள்ளார்.

அந்தப் பகுதியை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு குறித்த பாடசாலையின் மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

எனினும் கண்டி – குருணாகல் பிரதான வீதியில் தடை ஏற்படுத்தும் வகையில் இந்த மாணவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக கோபம் கொண்ட பொலிஸ் அதிகாரி அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]